search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ்காரர் தற்கொலை முயற்சி"

    ஈரோட்டில் குடும்ப தகராறு காரணமாக மனைவியுடன் போலீஸ்காரர் விஷம் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு பூந்துறை ரோடு ஸ்ரீநகரை சேர்ந்தவர் பூமலை (வயது 31). இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் தம்மநாயக்கன் பட்டி.

    ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பூமலை பணிபுரிகிறார். இவரது மனைவி பெயர் கலைசெல்வி (26). இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    பூமலை பலரிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன்- மனைவி இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த பூமலை மனைவி கலைச்செல்வி திடீரென வீட்டில் இருந்த வி‌ஷத்தை (எலி மருந்து) குடித்து விட்டார். இதனால் மயங்கி விழுந்தார்.

    2 மணி நேரம் கழித்து போலீஸ்காரர் பூமலை வீட்டுக்கு வந்தார். அங்கு தன் மனைவி வி‌ஷம் குடித்ததை கண்ட அவரும் வி‌ஷத்தை குடித்து விட்டார்.

    இதனால் இருவரும் மயங்கி கிடந்தனர். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து கணவன் மனைவி இருவரையும் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பிறகு மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    போலீஸ்காரரின் மகள் சம்பவத்தின்போது வெளியே விளையாட சென்று விட்டதால் தப்பினாள். இந்த சம்பவம் குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் விடுப்பு கொடுக்காததால் மனவேதனை அடைந்த போலீஸ்காரர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் சிவகிரியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது30). இவர் நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார். இவரது சகோதரி குழந்தைக்கு இன்று காது குத்தும் விழா நடக்கிறது. அந்த விழாவில் தாய் மாமன் சடங்கு செய்வதற்காக வெங்கடேசை அழைத்திருந்தனர். அதற்கு செல்ல இன்ஸ்பெக்டர் சாந்தியிடம் வெங்கடேஷ் 3 நாள் விடுப்பு கேட்டிருந்தார். அதற்கு அவர் விடுப்பு கொடுக்க மறுத்ததாக தெரிகிறது.

    இதனால் வெங்கடேஷ் மனவேதனை அடைந்தார். இன்று காலை போலீஸ் நிலையத்தின் மாடிக்கு சென்ற அவர் அங்கு கிடந்த டியூப் லைட்களை உடைத்து உடலில் கிழித்து கொண்டார். இதனால் அவருக்கு ரத்தம் கொட்டியது. இதனை பார்த்த மற்ற போலீசார் வெங்கடேசை நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சிகிச்சைக்கு பின்னர் வெங்கடேசை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார்கள். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலீஸ்காரர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனிடையே தற்கொலைக்கு முயன்ற போலீஸ்காரரை போட்டோ எடுப்பதற்காக பத்திரிகையாளர்கள் நாங்குநேரி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். உடனே போலீசார் அவர்களிடம் இருந்த செல்போன்களை பறித்தனர். இதையடுத்து போலீசாருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    தாராபுரம் அருகே பல்வேறு வழக்கு உள்ளதால் அச்சம் அடைந்த போலீஸ்காரர் அரளி விதை தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தாராபுரம்:

    பழனி ஆயக்குடியை சேர்ந்தவர் ரங்கநாயகம். இவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக உள்ளார்.

    இதற்கு முன்பு ரங்கநாயகம் உடுமலையில் வேலை பார்த்தார். அப்போது அவர் விசாரணை கைதியை கடுமையாக தாக்கியதாக வழக்கு உள்ளது. இதேபோல் குண்டடம் பகுதியில் தொழில் அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கு உள்ளது. இதனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தவிர போலீஸ்காரர் ரங்கநாயகம், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜூடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    விசாரணை முடிவில் தனது வேலை பறிபோகும் என்று ரங்கநாயகம் அச்சமடைந்தார். இதனால் விரக்தியடைந்த அவர் நேற்று அரளி விதையை அரைத்து குடித்தார். இதில் மயங்கிய அவரை உறவினர்கள் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போலீஸ்காரர் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துகொண்ட சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள பள்ளிக்கூடம் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 35). இவர் விழுப்புரம் ஆயுதப் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

    அதே காவல் துறையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த மேல்சித்தாமூரை சேர்ந்த ஓவியா என்பவருடன் குமரேசனுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் விழுப்புரம் ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த நிலையில் ஓவியா திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார்.

    இதனைத்தொடர்ந்து கணவன்-மனைவிக் கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று குமரேசன் செல்போனில் தனது மனைவி ஓவியாவுடன் பேசினார்.

    அப்போது அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் குமரேசன் மனவேதனை அடைந்தார். பின்னர் அவர் வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மருத்துவமனைக்கு சென்றார். சிகிச்சை பெற்று வரும் குமரேசனை பார்த்து உடல்நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

    போலீஸ்காரர் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துகொண்ட சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×